பாறை மீன் குழம்பு /Fish Gravy – mubin jannath

2014-08-21
  • Prep Time : 0m
  • Cook Time : 0m
  • Ready In : 0m

பாறை மீன் குழம்பு

தேவையான பொருட்கள் :

பாறை மீன் – 1/2 கிலோ.

சின்ன வெங்காயம் – 100 கி.

தக்காளி – 3

பச்சை மிளகாய் – 6 (நடுவில் கீறிக்கொள்ளவும்)

தேங்காய் – பெரிய மூடி 1

ஜீரகம் – 1 டீஸ்பூன்

வெந்தயம் – 1 டீஸ்பூன்

புளி – எலுமிச்சை அளவு.

மிளகாய் தூள் – 2 1/2 – தே.க

மல்லித்தூள் – 2 தே.க.

மஞ்சள் தூள் – 1/2 தே.க.

மாங்காய் – 1 முழுவதும்

தேங்காய் எண்ணெய் – 4 தே.க.

உப்பு – ருசிக்கு தகுந்தவாறு.

செய்முறை :-

1. முதலில் மீனை கழுவி சுத்தப்படுத்திக்கொள்ளவும்.

2. தேங்காயை துருவி அதில் மிளகாய் தூள், மல்லித்தூள், மஞ்சத்தூள் ஆகியவற்றை சேர்த்து நன்றாக அரைத்து தனியே வைக்கவும்.

3. ஒரு பாத்திரத்தில் நீர் ஊற்றி அதில் புளியை ஊற வைக்கவும்.

4. வெங்காயம் மற்றும் தக்காளியை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும். பச்சை மிளகாயை கீறி விடவும். மாங்காயை துண்டாக நறுக்கவும்.

5. அடுப்பில் சட்டியை வைத்து அதில் தேங்காய் எண்ணெயை ஊற்றி காய்ந்ததும் ஜீரகம் மற்றும் வெந்தயத்தை போட்டு பொறிந்ததும் வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை போட்டு பொன்னிறமாகும் வரை வதக்கவும். பிறகு தக்காளியை போட்டு வதக்கவும்.

6. பிறகு தேங்காய் அரைத்த கலவையை சேர்த்து 2 நிமிடம் வரை கிளரவும். அடுத்து புளி கரைத்த தண்ணீரை ஊற்றவும். அதனுடன் கழுவி வைத்த மீனையும் உப்பையும் போடவும்.

7. 10 நிமிடம் கழித்து மிளகாய்தூள் வாசனை போனதும் மாங்காயை போட்டு 10 நிமிடம் கழித்து இறக்கவும்.

சுவையான மீன் குழம்பு தயார்.

டிஸ்கி :

எந்த வகை மீன் வேண்டுமானாலும் சேர்த்துக்கொள்ளலாம்.

Average Member Rating

(3.2 / 5)

3.2 5 5
Rate this recipe

5 people rated this recipe

Related Recipes:
  • pudding

    Condensed Milk Caramel Pudding without oven

  • soft poori

    Soft Poori / உப்பலான பூரி

  • chicken fried rice

    Chicken Fried rice / சிக்கன் ஃப்ரைடு ரைஸ் (Leftover)

  • chicken curry1

    Kayal Chicken gravy / முருங்கைகாய் கோழிகறி ஆணம்

  • sandwich

    வெஜ் பிரெட் சாண்ட்விச்/veg bread sandwich

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *