தம்மடை/ Dhammadai kayal sweets

2014-03-01
 • Yield : 32
 • Servings : 32
 • Prep Time : 6:0 h
 • Cook Time : 25m
 • Ready In : 6:25 h

காயல் நகரின் பிரபலமான இனிப்பு பண்டங்களில் தம்மடையும் ஒன்று.. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் ஆரோக்கியமான பண்டம் இது. 

Ingredients

 • ரவை - 300கிராம்
 • மைதா - 3 மேசைக்கரண்டி
 • தேங்காய் பால் - 400 கிராம் அல்லது (இரண்டு முழு தேங்காயினை துருவி தலைப்பால் மட்டும் எடுத்து வைக்கவும்)
 • சீனி - 300கிராம்
 • கண்டஸ்டு மில்க் - 50மில்லி (அ) சுண்ட காய்ச்சிய பால் 1/2 கப்
 • நெய் - 100மில்லி
 • முட்டை - 2
 • ஏலக்காய் பொடி - ஒரு சிட்டிகை
 • உப்பு - ஒரு சிட்டிகை
 • வெண்ணிலா எஸ்ஸென்ஸ் - 1/4 டீஸ்பூன்
 • அலகரிக்க: முந்திரி, பாதம், பிஸ்தா - தேவைக்கு
 

Method

Step 1

ஒரு பவுலில் ரவை + மைதா + தேங்காய் பால் ஊற்றி 4 -5 மணி நேரம் ஊற வைக்கவும்

Step 2

சீனியினை மிக்ஸூயில் நைசாக அரைத்து வைக்கவும்

Step 3

5 மணி நேரம் கழித்து ரவை கலவையுடன் பொடித்த சீனி, கண்டன்ஸ்டு மில்க், ஏலகாயினை சேர்த்து நன்றாக கலந்து இன்னும் ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்

Step 4

தம்மடை சூட போகும் 10 நிமிடங்களுக்கு முன்பு ரவை கலவையில் முட்டை , நெய் , உப்பு, எஸ்ஸென்ஸ் சேர்த்து நன்றாக கரண்டி வைத்து ஒரே சீராக கலக்கி வைக்கவும்

Step 5

அவனை 160 டி முன் சூடு செய்யவும். இந்த நேரத்தில் தம்மடை கிண்ணத்தில் கொஞ்சம் நெய் தடவி வைக்கவும். ( தம்மடை கிண்ணம் என்பது பல வடிவங்களில் இருக்கும் அலுமிணயம் கிண்ணம்) இங்கு என்னிடம் அந்த கிண்ண்டம் இல்லை என்பதால் அலுமிணியம் ஃபாயில் கிண்ணத்தினை பயன்படுத்தி இருக்கிறேன். ஃபாயில் கிண்டத்துக்கு நெய் தடவ தேவையில்லை

Step 6

இந்த கிண்ணங்களை பேக்கிங் ட்ரேயில் வைத்து ஓவ்வொரு கிண்ணத்திலும் ஓவ்வொரு கரண்டி கிண்ணத்தில் முக்கால் பகுதி ஊற்றவும். ( மாவு பதம் இட்லி மாவினை விட கொஞ்சம் திக்காக இருக்கும்)

Step 7

இதன் மேல் நீட்டமாக நறுக்கிய முந்திரி, பாதாம், பிஸ்தா போன்ற மேவா சாமாண்களை தூவி அவனில் வைக்கவும்

Step 8

ஓவ்வொரு அவணுக்கும் நேரங்கள் வேறு படலாம் ஆகையால் 10 - 15 நிமிடங்களில் நல்ல மணம் அவணில் இருந்த நல்ல வாசனை வரும் அப்ப கொஞ்சம் அவனை பார்க்கவும் மேலே லைட்டாக கோல்டன் ப்ரவுண் ஆணவுடன் அவனை ஆப் செய்து விட்டு 5 நிமிடம் அப்படியே வைத்து பிறகு எடுத்து வெளியே வைக்கவும். ( அதிக நேரம் அவனில் இருந்தால் தம்மடை முறுகிவிடும்.. சுவையும் மாறுபடும்.

இதனை எங்கள் ஊரில் பல வீடுகளில் (குடிசை தொழில்  போல் ) சில பெண்கள் இதனை  விற்பனை செய்து வருகிறார்கள்.. 

Average Member Rating

(3.6 / 5)

3.6 5 10
Rate this recipe

10 people rated this recipe

Related Recipes:
 • pudding

  Condensed Milk Caramel Pudding without oven

 • soft poori

  Soft Poori / உப்பலான பூரி

 • chicken fried rice

  Chicken Fried rice / சிக்கன் ஃப்ரைடு ரைஸ் (Leftover)

 • sandwich

  வெஜ் பிரெட் சாண்ட்விச்/veg bread sandwich

 • cuttlet1

  Chicken cutlet /சிக்கன் கட்லெட்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *