இனிப்பு பேரீச்சை பழம் போண்டா/ Dates bonda

2016-01-25
  • Prep Time : 0m
  • Cook Time : 0m
  • Ready In : 0m

சமையல் பற்றிய சிறுவிளக்கம் – பேரீச்சை பழம் ரம்ஜான் மாதத்தில் எல்லா இஸ்லாமிய குடும்பத்திலும் உபயோகிக்கின்ற பழம். இது மிகவும் சத்தானது. பேரீச்சை பழம் பயன் படுத்தி பல வக சமயல் செய்யலாம். பேரீச்சை பழம் கேக், பேரீச்சை பழம் பிஸ்கட், பேரீச்சை பழம் புட்டிங், பேரீச்சை பழம் அல்வா, மற்றும் பல. அதில் ஒன்று தான் இந்த போண்டா. இந்த போண்டாவின் சுவை வாழைப்பழம் போண்டா மாதிரிதான் இருக்கும். பேரீச்சை பழம் சாப்பிடாத குழந்தைகளுக்கு இதை மாதிரி போண்டா செய்து குடுத்தால், மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.

PhotoGrid_1451987448829 PhotoGrid_1451987466395

தேவையான பொருட்கள்:
1 1/2 கப் மைதா
1/2 கப் Rava + 1/4 கப் தண்ணீர் (10 நிமிடங்கள் ஊற வைக்கவும்)
3 டேபிள் ஸ்பூன் சர்க்கரை
8 அல்லது 9 பேரீச்சை பழம் (விதை நீக்கி)
1 முட்டை
1/2 டீ ஸ்பூன் சோடா மாவு
உப்பு ஒரு சிட்டிகை
3/4 கப் அல்லது வேண்டும் அளவு தண்ணீர்
3 கப் எண்ணெய் (டீப் ஃப்ரை)

PhotoGrid_1451987494359 IMG_20160105_212811 (2)

செய்முறை

1) முதலில், பேரீச்சை பழத்தை கையால் நசுக்கி, பேஸ்ட் ஆக்கவும்.
2) பேரீச்சை பழம் மற்றும் அனைத்து பொருட்களை ஒன்றாக சோர்த்து தண்ணீர் கலந்து, நன்றாக கலக்கவும்.
3) ஒரு 2 மணி நேரம் சென்று மூடி வைக்கவும்.
4) அடுப்பில் கடாய் வைத்து, எண்ணெய் ஊற்றி, எண்ணெய் சூடானதும், ஒரு டேபிள் ஸ்பூனில் சின்ன சின்ன பந்து கலாக மா நிரம் வரும் வரை பொரித்து எடுக்கவும்.

சமைக்கும் நேரம்: 30 நிமிடம்

பரிமாறும் அளவு : 25 போண்டா கிடைக்கும்

ஆயிஷா அப்துல் ஜப்பார்

மலேஷியா

Average Member Rating

(0 / 5)

0 5 0
Rate this recipe

0 people rated this recipe

Related Recipes:
  • pudding

    Condensed Milk Caramel Pudding without oven

  • soft poori

    Soft Poori / உப்பலான பூரி

  • chicken fried rice

    Chicken Fried rice / சிக்கன் ஃப்ரைடு ரைஸ் (Leftover)

  • chicken curry1

    Kayal Chicken gravy / முருங்கைகாய் கோழிகறி ஆணம்

  • sandwich

    வெஜ் பிரெட் சாண்ட்விச்/veg bread sandwich

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *