பேரீச்சை பழம் அச்சார் / Dates Achar

2016-02-10
  • Prep Time : 0m
  • Cook Time : 0m
  • Ready In : 0m
இது குறிப்பிட்ட ஒரு நாட்டின் இஸ்லாமிய பாரம்பரிய டிஷ் என்று சொல்ல முடியாது. ஆனால் மலேசியா மற்றும் சிங்கப்பூரில் இந்த அச்சாருடன் மற்ற பழ வகைகளும் சேர்த்து பழம் அச்சார் செய்வார்கள். இந்த அச்சார் பிரியாணி மற்றும் நெய் சோறுடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும். அரவே தண்ணீர் பயன் படுத்தாமல் செய்வதினாலும் மற்றும் வெனிகர் கலந்து இருப்பதினாலும் ரொம்ப (1 வாரம்) நாள் வரைக்கும் பயன் படுத்தலாம். ஃப்ரிஜில் வைத்தால் 1 மாதம் வரைக்கும் சாப்பிடலாம்.
 
datesacharதேவையான பொருட்கள்:
 
20 பேரீச்சை பழம் (கொட்டை இல்லாமல்)
5 சிறிய வெங்காயம் (இரண்டாக நறுக்கவும்)
5 பல் பூண்டு (மெலிதாக நறுக்கவும்)
1 இன்சி இஞ்சி (மெலிதாக நறுக்கவும்)
1/2 கப் ப்ரவுன் சுகர்
1/4 கப் ஆப்பிள் சிடார்/ தேன் வெனிகர்
1 டேபிள் ஸ்பூன் வருத்த வெள்ளை எள்ளு
1 கை பிடி உலர்ந்த திராச்சை
12 காய்ந்த மிளகாய்
1/2 கப் எண்ணெய் (தாளிக்க)
 
PhotoGrid_1454998831930 PhotoGrid_1455000068823 PhotoGrid_1455000810117
செய்யும் முறை:
1. முதலில், அடுப்பில் கடாய் வைத்து காய்ந்த மிளகாயை வறுக்கவும்.
2. வறுத்த மிளகாயை தண்ணீர் ஊற்றாமல் மிக்ஸியில் அரைத்து தூள் ஆக்கவும்.
3. அடிப்பில் கடாய் வைத்து, எண்ணெய் ஊற்றி, எண்ணெய் சூடானதும், தூளாக்கிய காய்ந்த மிளகாயை தாளிக்கவும்.
PhotoGrid_1455000860380 PhotoGrid_1455000899532 PhotoGrid_1455000917386
4. அதில், வெங்காயம், பூண்டு, இஞ்சி சேர்த்து வேக வைக்கவும்.
5. அதன் பின்னர், ப்ரவுன் சுகர் மற்றும் வெனிகர் சேர்க்கவும்.
datesachar
6. கடைசியாக அதில் பேரிச்சை பழம், உலர்ந்த திராட்சை மற்றும் எள்ளு சேர்த்து சிறிது நேரம் கிண்டி அடுப்பை அனைக்கவும்.
 
சமைக்கும் நேரம் : 30 நிமிடம்
 
பரிமாறும் அளவு: 3 கப் அச்சார் கிடைக்கும்
 
ஆயிஷா அப்துல் ஜபார்
 
மலேசியா
Average Member Rating

(4 / 5)

4 5 1
Rate this recipe

1 people rated this recipe

Related Recipes:
  • pudding

    Condensed Milk Caramel Pudding without oven

  • soft poori

    Soft Poori / உப்பலான பூரி

  • chicken curry1

    Kayal Chicken gravy / முருங்கைகாய் கோழிகறி ஆணம்

  • sandwich

    வெஜ் பிரெட் சாண்ட்விச்/veg bread sandwich

  • cuttlet1

    Chicken cutlet /சிக்கன் கட்லெட்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *