கோயம்புத்தூர் சிக்கன் கறி / Coimbatore Chicken curry

2015-09-08
  • Prep Time : 0m
  • Cook Time : 0m
  • Ready In : 0m

கோயம்புத்தூர் சிக்கன் கறி / Coimbatore Chicken curry

தேவையான பொருட்கள் :
தோல் நீக்கிய கோழி – 500 கிராம் பெரிய துண்டுகளாக நறுக்கவும்
சிறிய வெங்காயம் – 300 கிராம்
கொத்தமல்லி – அரை கொத்து
கறிவேப்பிலை -1 கப்
5 கிராம்பு மற்றும் பச்சை மிளகாய் – கார தேவைக்கு
இஞ்சி பேஸ்ட் – சிறுது
தக்காளி – 1
தேங்காய் எண்ணெய் – ஒரு மே கரண்டி
முழு கரம் மசாலா – (கருவா, 3 உலர் சிவப்பு மிளகாய் – 1 ஸ்பூன் சீரகம் மற்றும் 1 ஸ்பூன் பெருஞ்சீரகம் விதைகள்)
1 தேக்கரண்டி தேங்காய் பவுடர் மற்றும் கொத்தமல்லி தூள்
1 தேக்கரண்டி Briyani மசாலா தூள்
உப்பு – தேவைக்கு

20131009_214436

 

செய்முறை:
கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்த பின்பு கரம் மசாலா பொருட்கள் மற்றும் கறிவேப்பிலை போடவும். அதில் நறுக்கிய வெங்காயம் , கிராம்பு, பச்சை மிளகாய் , இஞ்சி பேஸ்ட் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் கலர் மாறிய பிறகு தக்காளி சேர்த்து வதக்கவும்.

20131009_214930 20131009_215610

தக்காளி பாதி வதங்கிய பிறகு சிக்கனுடன் கொத்தமல்லி இலை மற்றும் மீதியிருக்கும் மாசாலா பொருட்களை போட்டு வதக்கவும். இதனுடன் ஒரு கப் தண்ணீர் ஊற்றி இருபது நிமிடங்கள் குறைந்த தணலில் மூடி போட்டு வேக வைக்கவும்.
சுவையான கோயம்புத்தூர் சிக்கன் கறி ரெடி… மேலே கொத்தமல்லி தூவி சாதத்துடன் பரிமாறவும்…
Pradeep Rajkumar.
Bellandur,Bangalore-India.
உங்கள் சமையல் குறிப்புகளை எங்களுடன் பகிரவிரும்பினால் kpmsamayal@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்

Average Member Rating

(0 / 5)

0 5 0
Rate this recipe

0 people rated this recipe

Related Recipes:
  • pudding

    Condensed Milk Caramel Pudding without oven

  • soft poori

    Soft Poori / உப்பலான பூரி

  • chicken fried rice

    Chicken Fried rice / சிக்கன் ஃப்ரைடு ரைஸ் (Leftover)

  • chicken curry1

    Kayal Chicken gravy / முருங்கைகாய் கோழிகறி ஆணம்

  • sandwich

    வெஜ் பிரெட் சாண்ட்விச்/veg bread sandwich

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *