சாக்கொலேட் மட் கேக் / Chocolate Mud Cake

2016-08-09
 • Prep Time : 0m
 • Cook Time : 0m
 • Ready In : 0m

சாக்கொலேட் மட் கேக்

#தேவையான_பொருட்கள்#

More recipes please visit www.kayalsamayal.com

பட்டர் – 200கிராம்

டார்க் சாக்கொலேட் – 200 கிராம்

சீனி (பொடித்தது) – 350 கிராம்

சுடு தண்ணீர் – 125 மில்லி

இன்ஸ்டண்ட் காஃபி பவுடர் – 20 கிராம்

பால் – 1 கப்

முட்டை – 4

வெஜிடபில் எண்ணெய் – 1/4 கப்

மைதா – 300 கிராம்

பேக்கிங் சோடா – 1/2 tbsp

பேக்கிங் பவுடர் – 1 tbsp

உப்பு – 2 tsp

கோக்கோ பவுடர் – 45 கிராம்

Mud cake

#செய்முறை:

More recipes please visit www.kayalsamayal.com

1. முதலில் மைதா, பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா, உப்பு இவை அனைத்தையும் ஒன்றாக கலந்து சல்லடையை கொண்டு சலித்துக் கொள்ளவும்.

2. ஒரு சட்டியில் தேவையான அளவு சுடு தண்ணீர் எடுத்து, அதன் மேல் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் பட்டர், டார்க் சாக்கொலேட், சீனி சேர்க்கவும்.

3. பின் சுடு தண்ணீரில் காஃபி பவுடர் சேர்த்து கலக்கி, மேல் உள்ளவற்றில் சேர்த்து டபுள் பாயில் முறைப்படி மெல்ட் செய்து கொள்ளவும்.

4. பின் சட்டியை தனியாக எடுத்து, பால் சேர்த்து நன்கு பீட் செய்யவும்.

5. முட்டையை ஒவ்வொன்றாக சேர்த்து பீட் செய்யவும். பின் எண்ணெய் சேர்த்து நன்கு பீட் செய்யவும்.

6. பின் மைதா கலவையை இதில் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து திக் & கிரீமி பதம் வரும் வரை நன்கு பீட் செய்யவும்.

7. பின் பேக்கிங் டிரேயில் ( வட்டம் ) பட்டர் தடவி அதன் மேல் பட்டர் பேப்பரை சுற்றி வரை ஒட்டவும்.

8. பேட்டரை அதில் ஊற்றி முன் சூடு செய்த அவனில் 150°c ல் 1 1/2 மணி நேரம் பேக் செய்து எடுக்கவும்.

#சாக்கொலேட்_கனாஷே_செய்ய_தேவையானவை#

பால் – 2 கப்

டார்க் சாக்கொலேட் – 50 கிராம்

கோகோ பவுடர் – 20 கிராம்

கண்டன்ஸ்டு மில்க் – 1 1/2 கப்

பட்டர் – 20 கிராம்

#செய்முறை:

1. சட்டியை அடுப்பில் வைத்து, பால் ஊற்றி பின் டார்க் சாக்கொலேட் சேர்த்து மெல்ட் செய்யவும்

2. பின் கோகோ பவுடர் சேர்த்து மிக்ஸ் செய்த பின் பட்டர், கண்டன்ஸ்டு மில்க் சேர்த்து நன்கு மிக்ஸ் செய்யவும்.

3. இவை ஓரளவிற்கு திக்காக வந்த பிறகு அடுப்பை அணைத்து விடவும்.

4. பேக் செய்த கேக்கை எடுத்து, அதன் மேல் பகுதியை கொஞ்சம் கட் செய்து, சாக்கொலேட் கனாஷாவை கேக்கின் மேல் ஊற்றி 20- 30 நிமிடங்கள் ஃப்ரிஜ்ஜில் வைத்து எடுத்தால் கலக்கலான அசத்தலான சுவையில் சாக்கொலேட் மட் கேக் தயார்..

இந்த ரெசிபியை நமக்காக செய்து அனுப்பியவர்

Sabreen – காயல்

Average Member Rating

(0 / 5)

0 5 0
Rate this recipe

0 people rated this recipe

Related Recipes:
 • nutella-cake

  நியூடெல்லா கேக் / Nutella Cake

 • icebox-cake

  ஐஸ் பாக்ஸ் கேக் /Ice Box Cake

 • cheese-cake

  சீஸ் கேக் / Cheese Cake

 • coconut-burfi

  தேங்காய் பூ பர்ஃபி / coconut burfi

 • cup cake

  ஆரஞ்சு கப் கேக் / muffin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *