கொண்டைக்கடலை புலாவ் /chickpea pulao

2015-11-03
  • Prep Time : 0m
  • Cook Time : 0m
  • Ready In : 0m

தேவையானவை:
பாஸ்மதி அரிசி – ஒரு கப்
தண்ணீர் – 2 கப்,
வேக  வைத்த  கொண்டைக்கடலை – அரை கப்,
வெங்காயம் – ஒன்று
தக்காளி – ஒன்று
பச்சமிளகாய் – 3 (கார தேவைக்கு )
இஞ்சி பூண்டு விழுது – ஒரு மே.கரண்டி
தயிர் – ஒரு மே கரண்டி
கொத்தமல்லி/ புதினா – சிறுது
தாளிக்க : சீரகம் ,பட்டை, கிராம்பு ஏலக்காய் , பிரிஜ்ஜி இலை
உப்பு -தேவைக்கு
பட்டர் /நெய் / எண்ணெய் – ஒரு குழி கரண்டி

chickpeas rice

செய்முறை:

குக்கரில் பட்டர் போட்டு உருகியவுடன் அதில் தாளிக்க கொடுத்த பொருட்களை சேர்க்கவும். பிறகு நறுக்கிய வெங்காயம் போட்டு வதக்கவும் கொஞ்சம் கலர் மாறிய பிறகு அதில் நறுக்கிய பச்சைமிளகாய் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். பச்ச வாசனை போன பின்பு அதில் நறுக்கிய தக்காளி சேர்க்கவும். சிறுது சிம்மில் வதக்கவும். இதில் தயிர் சேர்க்கவும்.நன்றாக கிளறிய பின்பு வேக வைத்த கொண்டக்கடலை சேர்க்கவும் நன்றாக விரவி மூடி போட்டு 5நிமிடங்கள் வேக வைக்கவும். பிறகு தேவைக்கு உப்பு கொத்தமல்லி, புதினா சேர்த்து பிரட்டி விடவும். தேவைக்கு தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்கவும். தண்ணீர் கொத்தி வரும் பொழுது ஊற வைத்த அரிசி சேர்த்து நன்றாக கலந்து குக்கர் மூடி ஒரு விசில் ஹையில் வைத்து பிறகு தணலினை கம்மி செய்து 5 நிமிடங்கள் வைத்து இறக்கவும். விசில் அடங்கிய பின்பு விரும்பினால் எழுமிச்சை சாறு ஒரு ஸ்பூன் ஊற்றி கலந்து பரிமாறவும்.. சுவையான சத்தான கொண்டக்கடலை புலாவ் ரெடி…

Average Member Rating

(0 / 5)

0 5 0
Rate this recipe

0 people rated this recipe

Related Recipes:
  • pudding

    Condensed Milk Caramel Pudding without oven

  • soft poori

    Soft Poori / உப்பலான பூரி

  • chicken fried rice

    Chicken Fried rice / சிக்கன் ஃப்ரைடு ரைஸ் (Leftover)

  • chicken curry1

    Kayal Chicken gravy / முருங்கைகாய் கோழிகறி ஆணம்

  • sandwich

    வெஜ் பிரெட் சாண்ட்விச்/veg bread sandwich

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *