chicken shawarma/ சிக்கன் ஷவர்மா ( அரேபியன் சாண்ட்விச்)

2014-04-10
  • Prep Time : 0m
  • Cook Time : 0m
  • Ready In : 0m

அரபு நாடுகளில் அதிகமாக பல கடைகளில் காணப்படுவது ஷவர்மா தான், சமீப காலமாக நம்ம ஊரிலும் இது மிகவும் பிரபலமாகி வருகிறது.. இனி கடைகளில் வாங்க வேண்டாம் மிக சுலபமாக வீட்டிலே செய்யலாம் என்று  இந்த குறிப்பினை நமக்காக செய்து அனுப்பியவர்

ரீமாஇஸ்ஹாக்

Ingredients

  • பூண்டு பேஸ்ட்/ மயோணிஸ்:
  • பூண்டு - 4 பல்
  • முட்டை - 2
  • வினிகர் - 2ஸ்பூன்
  • உப்பு- 1 டீஸ்பூன்
  • எண்ணெய் - 400மில்லி
  • பேஸ் :
  • மைதா - 3கப்
  • கோதுமை மாவு - 1கப்
  • ஈஸ்ட் - 2 தேக்கரண்டி
  • முட்டை - 1
  • சீனி - 1 தேக்கரண்டி
  • சிக்கன் கலவை:
  • பேன் லெஸ் சிக்கன் - 1/2 கிலோ
  • கார்லிக் பேஸ்ட் - 4 டேபிள் ஸ்பூன்
  • ஓயிட் பெப்பர் - 3 டேபிள் ஸ்பூன்
  • இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
  • இதனை குக்கரிலில் போட்டு வேக வைத்து சிக்கனை உதிரித்து தனியாக வைக்கவும்.
  • காய்கறிகள்:
  • கேரட் - 2
  • தக்காளி - 4
  • பல்லாரி வெங்காயம் - 2
  • குடைமிளகாய் - 1

Method

Step 1

பூண்டு பேஸ்ட் /மயோணிஸ் செய்முறை:

Step 2

மிக்ஸூயில் பூண்டு, முட்டை, உப்பு, வினிகர் ஊற்றி நல்ல மிக்ஸியில் அரைக்கவும். நன்றாக அரைத்த பின்பு மிக்ஸூயின் மேல் மூடியினை திறந்து கொஞ்சம் கொஞ்சமாக எண்ணெய் ஊற்றவும்

Step 3

குறிப்பு: எண்ணெயினை முழுசாக ஊற்றினால் பேஸ்ட் போல இல்லாமல் எண்ணெய்யாகவே இருக்கும். ஆகையால் கொஞ்சம் கொஞ்சமாக சேர்க்கவும்.

Step 4

நல்ல பேஸ்ட் பதம் வந்தவுடன் மிக்ஸியினை நிறுத்திவிட்டு ஒரு பவுலில் எடுத்து வைக்கவும். கார்லிக் பேஸ்ட்/மயோணிஸ் ரெடி

Step 5

பேஸ் செய்முறை: பேஸ் செய்ய சொன்ன பொருட்கள் எல்லாத்தையும் ஒன்றாக ஒரு பவுலில் போட்டு தேவைக்கு தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு போல் பிசைந்து 2 மணிநேரம் ஊற வைக்கவும். இரண்டு மணி நேரம் கழித்து சப்பாத்தியாக சுட்டு எடுக்கவும்.

Step 6

ஷவர்மா ஸ்டப்பிங்: முதலில் நாந்-ஸ்டிக் பேனில் பொடியாக நறுக்கிய வெங்காயம், மற்றும் பொடியாக நறுக்கிய காயகறி கலவையினை ஒன்றன் பின் ஒன்றாக போட்டு வதக்கவும்

Step 7

நன்றாக வதங்கிய பிறகு வேக வைத்த சிக்கன் கலவையினை சேர்க்கவும். அரைத்து வைத்த கார்லிக் பேஸ்ட் தில் சிறுது பேஸ்க்கு எடுத்து வைத்துவிட்டு மீதியினை இதனுடன் கலந்து வைக்கவும். . தேவைக்கு ஓயிட் பெப்பர், உப்பு சேர்த்துக்கொள்ளவும்.

Step 8

ஷவர்மா ரோல் செய்முறை: பேஸ் மேலே சிறுது கார்லிக் பேஸ்ட் தடவி அதன் மேலே சிக்கன் கலவையினை வைத்து ரோல் செய்து பரிமாறவும் ஷவர்மா ரோல் ரெடி...

 

நமதூரில் நடந்த டப்பர்வேர் மீடிங்கில் அனைவரின் முன்பும் இந்த அருமையான ரெசிப்பியினை செய்துகாட்டிய ரீமாஇஸ்ஹாக் மீடிங்கல கலந்துக்கொள்ளாத நம்மை போல் பலருக்காகவும் இந்த ரெசிப்பியினை பகிர்ந்துள்ளார்

.

 

 

Average Member Rating

(5 / 5)

5 5 2
Rate this recipe

2 people rated this recipe

Related Recipes:
  • pudding

    Condensed Milk Caramel Pudding without oven

  • soft poori

    Soft Poori / உப்பலான பூரி

  • chicken fried rice

    Chicken Fried rice / சிக்கன் ஃப்ரைடு ரைஸ் (Leftover)

  • chicken curry1

    Kayal Chicken gravy / முருங்கைகாய் கோழிகறி ஆணம்

  • cuttlet1

    Chicken cutlet /சிக்கன் கட்லெட்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *