சிக்கன் சீஸ் பீட்சா / Chicken pizza

2015-09-13
 • Prep Time : 0m
 • Cook Time : 0m
 • Ready In : 0m

தேவையான பொருட்கள்

சிக்கன் – 1/2 கி
மைதா – 1 கி
ஈஸ்டு – 2 மே.கரண்டி
உப்பு – தேவைக்கு
சீனி – தேவைக்கு
ஆலிவ் ஆயில் – 2 மே.கரண்டி

கார்லிக் பவுடர் – சிறிதளவு (தேவைப் பட்டால் மட்டும் சேர்க்கவும்

பீட்சா சாஸ் – தேவைக்கு
பீட்சா சீஸ் – தேவைக்கு
வெங்காயம் – 1/2 கி (தேவையான வடிவத்தில் நறுக்கியது)
குடை மிளகாய் – 1/2 கி (தேவையான வடிவத்தில் நறுக்கியது)
தக்காளி – 1/2 கி
கருப்பு ஆலிவ் காய் – தேவைக்கு
ஓரிகேனோ – 2 தே.கரண்டி
பேஸில் – 1 தே.கரண்டி

 

பீட்சா சாஸ் செய்ய தேவையான பொருட்கள்
ஆலிவ் ஆயில் – 2 மே.கரண்டி  தக்காளி – 8 (4 பொடியாக நறுக்கியது, 4 பல்ப்)
வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)
பூண்டு – 4 பல் (பொடியாக நறுக்கியது)
ஓரிகேனோ – 2 சிட்டிகை
உப்பு – 1 சிட்டிகை
தக்காளி சாஸ் – சிறிதளவு

குடை மிளகாய் – 1 (பொடியாக நறுக்கியது)

முதலில் சிக்கனை கழுவி சிறிதளவு பெப்பர் மற்றம் உப்பு சேர்த்து வேக வைத்து எடுக்க வேண்டும்.
பீட்சா சாஸ் செய்முறை
முதலில் கொதிக்கும் வெண்ணீரில் 4 முழு தக்காளிகளை இட்டு 1 நிமிடத்தில் எடுக்கவும். பின் அவற்றின் தோல்களை உறிகத்து மிக்சியில் அரைத்து பல்ப் எடுக்கவும். பின் ஒரு பாத்திரத்தில் சிறிதளவு பட்டர் இட்டு காய்ந்த பின் பூண்டினை போடவும். பொன்நிறம் ஆன பின் பொடியாக நறுக்கிய வெங்காயம், குடை மிளகாய், போட்டு நன்றாக வதக்கவும். பின் நறுக்கிய மற்றும் பல்ப் செய்து வைத்த தக்காளிகளை போடவும். பின் உப்பு மற்றும் ஓரிகேனோ தூவி கலக்கி விட்டு சிறிதளவு தக்காளி சாஸ் ஊற்றி பாத்திரத்தை மூடி நன்கு கணிந்து கொதி விடும் வரை வேக விடவும். பீட்சா சாஸ் ரெடி. 
செய்முறை
முதலில் மிதமான வெண்ணீரில் ஈஸ்டு,மற்றும் சீனியை கரைத்து 10 நிமிடத்திற்கு ஊற வைக்க வேண்டும். பின் ஒரு பெரிய பாத்திரத்தில் மைதா,உப்பு,ஆலிவ் ஆயில்,கார்லிக் பவுடர்,ஊற வைத்த ஈஸ்டு கலவை,சிறிதளவு தண்ணீர் ஆகியவற்றை சேர்த்து சப்பாத்தி மாவை விட சிறிது இதமாக குழைத்து ஒரு மண் நேரம் மூடி வைக்க வேண்டும். மாவு நன்றாக உப்பியருக்கும். பின் ஒவ்வொரு உருண்டையாக பிடித்து வைக்க வேண்டும்.
chicken pizza
பீட்சா பேக் செய்யும் முறை

முதலில் பேக் செய்யும் பாத்திரத்தில் ஒரு உருண்டை மாவை கையை கொண்டே இருத்து விருப்பமான வடிவம் வரும்படி செய்ய வேண்டும். பின் அதன்மேல் பீட்சா சாஸ் தடவி ஒன்றன் பின் ஒன்றாக சீஸ்,நறுக்கிய காய்கறிகள்,சிக்கன் போன்றவைகளை செட் செய்து சிறிதளவு ஓரிகேனோ தூவி விட்டு முன்சூடு செய்த அவனில் 15 நிமிடத்திற்கு 220 டிக்ரியில் பேக் செய்து எடுத்தால் சுவையான பீட்சா ரெடி.

Average Member Rating

(5 / 5)

5 5 1
Rate this recipe

1 people rated this recipe

Related Recipes:
 • pudding

  Condensed Milk Caramel Pudding without oven

 • chicken fried rice

  Chicken Fried rice / சிக்கன் ஃப்ரைடு ரைஸ் (Leftover)

 • chicken curry1

  Kayal Chicken gravy / முருங்கைகாய் கோழிகறி ஆணம்

 • sandwich

  வெஜ் பிரெட் சாண்ட்விச்/veg bread sandwich

 • cuttlet1

  Chicken cutlet /சிக்கன் கட்லெட்

Recipe Comments

Comment (1)

 1. posted by Firthousiya m.m on March 22, 2016

  Maa shaa Allah good job

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *