Chicken Fried rice / சிக்கன் ஃப்ரைடு ரைஸ் (Leftover)

2017-07-02
  • Prep Time : 0m
  • Cook Time : 0m
  • Ready In : 0m

நாம் என்ன தான் சாதம் சரியான அளவில் வைத்தாலும் கொஞ்சம் சோறு மிஞ்ச தான் செய்யும். அப்படி மிஞ்சிய சோறு வைத்து முட்டை சோறு, எலுமிச்சை சாதம், புளிச்சோறு செய்வோம். இன்னைக்கு மதியம் சோறும் மிஞ்சியது கொஞ்சம் சிக்கன் 65 யும் மிஞ்சியது இரண்டையும் மிக்ஸ் செய்து இரவு ப்ரைடு ரைஸ் ரெடியாச்சு.. இப்ப எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

Leftover
சாதம் – 1கப்
சிக்கன் 65 – 6-7 துண்டுகள் (போன்லெஸ்)

மற்றவை:
எண்ணெய் -2 மே.கரண்டி
பூண்டு – 6 பல் பொடியாக நறுக்கியது
பச்சமிளகாய் – 1 பொடியாக நறுக்கியது
வெங்காயம் – 1/2 நீட்டமாக நறுக்கியது.
விரும்பிய காய்கறிகள் கேரட், கோஸ், குடைமிளகாய், பட்டாணி -1 கப்
சோயா சாஸ் – 1/2 மே.கரண்டி
மிளகுத்தூள் – 1 மே.கரண்டி
முட்டை – 2
உப்பு – தேவைக்கு

chicken fried rice (2)

செய்முறை:

முதலில் ஒரு நாண்ஸ்டிக் பேனில் சிறுது எண்ணெய் ஊற்றி முட்டையினை உடைத்து ஊற்றி அதில் சிட்டிக்கை மிளகு, சிட்டிகை உப்பு போட்டு நன்றாக கரண்டி வைத்து பிரட்டி பூ போல் உதிரியாக ரெடி செய்து தனியாக வைக்கவும்.

பிறகு அதே பேனில் எண்ணெய் ஊற்றி அதில் நறுக்கிய பூண்டு, பச்ச மிளகாய் வெங்காயம் சேர்த்து வதக்கவும் பிறகு நறுக்கிய காய்கறிகள் சேர்த்து வதக்கவும் இதனுடன் தேவைக்கு மிளகுத்தூள், சிறுது உப்பு சேர்த்து குறைந்த தணலில் வேக வைக்கவும்.

பாதி வெந்த பிறகு சிக்கன் 65 துண்டுகள் , முட்டை சேர்த்து பிரட்டி விடவும் இதனுடன் சோயாசாஸ் ஊற்றி மிக்ஸ் செய்வும் பிறகு அதில் சாதம் கலந்து நன்றாக மிக்ஸ் செய்து சிம்மில் 5 நிமிடங்கள் குறைந்த தணலில் வைத்து அடுப்பினை ஆப் செய்யவும். விரும்பினால் பொடியாக நறுக்கிய வெங்காய தாழ் இருந்தால் தூவவுன். சுவையான லெப்ட் ஓவர் ஃப்ரைடு ரைஸ் ரெடி..

More recipes please visit www.kayalsamayal.com

குறிப்பு:

மிஞ்சிய சாதம் உதிரியாக இருந்தால் தான் ப்ரைடு ரைஸ் செய்ய நல்லா இருக்கும்.

Average Member Rating

(0 / 5)

0 5 0
Rate this recipe

0 people rated this recipe

Related Recipes:
  • chicken curry1

    Kayal Chicken gravy / முருங்கைகாய் கோழிகறி ஆணம்

  • sandwich

    வெஜ் பிரெட் சாண்ட்விச்/veg bread sandwich

  • cuttlet1

    Chicken cutlet /சிக்கன் கட்லெட்

  • stuffed chappatti1

    Stuffed Chapatti / ஸ்டஃப்டு சப்பாத்தி

  • garlic-naan

    Garlic Naan /கார்லிக் நாண்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *