சிக்கன் கறிவடை / Chicken curry vadai

2016-11-01
  • Prep Time : 0m
  • Cook Time : 0m
  • Ready In : 0m

சிக்கன் கறிவடை

#Kayal_Samayal# #Chicken_Kari_Vadai#

#தேவையான_பொருட்கள்:

More recipes please visit www.kayalsamayal.com

கோழி (எலும்பில்லாதது) – 200கி

கடலை பருப்பு – 100கி

கொத்தமல்லி இலை – சிறிய கொத்து

ஏலக்காய் – 5

முழு மிளகு – 1/2 தேக்கரண்டி

சீரகம் – 1/2 தேக்கரண்டி

பெருஞ்சீரகம் – 1/2 தேக்கரண்டி

இஞ்சி பூண்டு விழுது – 1 மேஜைக்கரண்டி

தயிர் – 2 மேஜைக்கரண்டி

காயல் மசாலா தூள் – தேவைக்கு

உப்பு – தேவைக்கு

பச்சை மிளகாய் – 1

கருவாபட்டை – சிறிய துண்டு

கிராம்பு – 3

முட்டை – 1

தண்ணீர் – தேவைக்கு

 

kari-vadai

#செய்முறை:

More recipes please visit www.kayalsamayal.com

1. எலும்பு நீக்கப்பட்ட கோழி, இஞ்சி பூண்டு விழுது, தயிர், கிராம்பு, பட்டை, மசாலா, உப்பு, கொத்தமல்லி இலை, கடலைப்பருப்பு, பச்சை மிளகாய் எல்லாவற்றையும் போட்டு குக்கரில் வேக வைத்து எடுக்க வேண்டும்.

2. நன்கு வெந்த பின், தண்ணீர் இருப்பின் வற்றவைத்து அடுப்பை அணைத்து விட்டு, சூடு ஆறிய பின்பு அதனை மிக்ஸியில் போட்டு அரைக்கவும்.

3. பின் முட்டை ஊற்றி பிசைய வேண்டும்.

4. சீரகம், பெருஞ்சீரகம், மிளகு, ஏலக்காய் போட்டு மிக்ஸியில் திரித்து அந்த பொடியையும் அரைத்து வைத்த கறியுடன் சேர்த்து பிரட்ட வேண்டும்.

5. எண்ணெயை சட்டி காய்ந்ததும் ஊற்றி அதனை சிறிய உருண்டையாக தட்டி பொறித்து எடுக்க வேண்டும்.

சுவையான சிக்கன் வடை தயார்.

#டிப்ஸ்:

1. கறி கலவையினை அரைத்த பின்பு அதனை அடுப்பில் ஏற்றி உருண்டை பிடித்து வடை சுடும் பதம் வரும்வரை அதனை கிண்ட வேண்டும். பின் முட்டை சேர்க்கவும்.

2. சிக்கன் வைத்து செய்வதால் அதிக தண்ணீர் ஊற்ற தேவையில்லை.

3. சிக்கனுக்கு பதிலாக மட்டன் மற்றும் பீஃப் உபயோகித்தும் கறி வடை செய்யலாம்.

இந்த ரெசிபியை நமக்காக செய்து அனுப்பியவர்

Beevi Fathima – ஹாங்காங்

Average Member Rating

(0 / 5)

0 5 0
Rate this recipe

0 people rated this recipe

Related Recipes:
  • pudding

    Condensed Milk Caramel Pudding without oven

  • soft poori

    Soft Poori / உப்பலான பூரி

  • chicken fried rice

    Chicken Fried rice / சிக்கன் ஃப்ரைடு ரைஸ் (Leftover)

  • chicken curry1

    Kayal Chicken gravy / முருங்கைகாய் கோழிகறி ஆணம்

  • sandwich

    வெஜ் பிரெட் சாண்ட்விச்/veg bread sandwich

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *