Chappati Noodles/ சப்பாத்தி நூடுல்ஸ்

2015-10-08
  • Prep Time : 0m
  • Cook Time : 0m
  • Ready In : 0m

பிள்ளைகளுக்கு பிடித்த நுடுல்ஸ் … கொஞ்சம் ஆரோக்கியமாக மீந்த சப்பாத்தியில் விரும்பிய காய்கறிகள் சேர்த்து செய்து இருக்கேன்.. சில நாட்களுக்கு முன்பு ஒரு தொலைக்காட்சியில் இந்த சமையலை பார்த்தேன்.. வீட்டில் செய்துபார்த்தேன் பிள்ளைங்க ரொம்ப விரும்பி சாப்பிட்டார்கள் நீங்களும் ட்ரை பண்ணுங்கள்…

bread upma

தேவையான பொருட்கள்:

சப்பாத்தி – 5
வெங்காயம் – 1
விரும்பிய காய்கறிகள் கோஸ் , கேரட், குடைமிளகாய் – ஒரு கப்
இஞ்சி சின்ன துண்டு
பூண்டு – 3 பல்
பச்ச மிளாகாய் – 3
சோயா சாஸ் – ஒரு மே கரண்டி
தக்காளி சாஸ் – ஒரு மே கரண்டி
வெங்காயத்தாள் – 2 மே கரண்டி
கொத்தமல்லி – சிறுது
எண்ணெய் – ஒரு மே கரண்டி

chappathi noodles

செய்முறை:

 

மீந்த சப்பாத்தியினை மெலிசாக நீட்டமாக கட் செய்து எடுத்து வைக்கவும். இது போல் இஞ்சி, பூண்டு, வெங்காயம், காய்கறிகளை நீளவாக்கில் நறுக்கி வைக்கவும்.

கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்த பின்பு இஞ்சி, பூண்டு வெங்காயம் போட்டு சிறுது வதக்கவும். கொஞ்சம் வதங்கிய பின்பு அதில் நீட்டமாக நறுக்கிய பச்சைமிளகாய் மற்றும் காய்கறிகளை சேர்த்து வதக்கவும். சிறுது தண்ணீர் தெளித்து மூடி போட்டு குறைந்த தணலில் வேக வைக்கவும். (தண்ணீர் இருக்க கூடாது) காய்கறிகள் வெந்த பின்பு நறுக்கிய சப்பாத்தியினை சேர்க்கவும் நன்றாக பிரட்டி விடவும். அதில் சாஸ் வகைகளை ஊற்றவும். நன்றாக பிரட்டி விட்டு தேவைக்கு உப்பு சேர்த்து இறக்கவும். நறுக்கிய வெங்காயதாள் விரும்பினால் சிறுது எலுமிச்சை சாறு சேர்த்து பரிமாறவும்.

குறிப்பு:

அதிக தண்ணீர் சேர்க்க வேண்டாம்.. சாப்பாத்தி சேர்க்கும் பொழுது உதிரி உதிரியாக இருக்க வேண்டும்.

பிள்ளைகளுக்கு காலை நேர டிபனுக்கு செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள்… மதியம் லஞ்ச் க்கும் செய்து கொடுக்கலாம்.

பச்சை மிளகாய்க்கு பதில் சில்லி சாஸ் அல்லது மிளகுத்தூள் பயன்படுத்தலாம்.. பிள்ளைகளுக்கு கொடுக்கும் பொழுது கார அளவினை குறைத்துக்கொள்ளலாம் 

Average Member Rating

(4.5 / 5)

4.5 5 2
Rate this recipe

2 people rated this recipe

Related Recipes:
  • pudding

    Condensed Milk Caramel Pudding without oven

  • soft poori

    Soft Poori / உப்பலான பூரி

  • chicken fried rice

    Chicken Fried rice / சிக்கன் ஃப்ரைடு ரைஸ் (Leftover)

  • sandwich

    வெஜ் பிரெட் சாண்ட்விச்/veg bread sandwich

  • cuttlet1

    Chicken cutlet /சிக்கன் கட்லெட்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *