ப்ருக்கோலி–சீஸ் க்ராக்கட்ஸ்/ broccoli croquettes

2016-01-13
  • Prep Time : 0m
  • Cook Time : 0m
  • Ready In : 0m

==========================

தேவையான பொருட்கள்
=========== ===========

உருளைக் கிழங்கு =½கிலோ
ப்ருக்கோலி=1(மீடியம்)
சீஸ்=50கி
எலுமிச்சம் பழம= ½
மிளகுத்தூள் =காரத்திற்கேற்ப
கரம் மசாலா=1சிட்டிகை
கொ.மல்லி தழை=கொஞ்சம்
உப்பு=தேவைக்கு
மைதா=கொஞ்சம்
ரஸ்க் தூள்,முழுஓட்ஸ்=2:1 அளவு
எண்ணெய் =பொறித்தெடுக்க

broccoli croquettes

செய்முறை:-
==========

உருளைக்கிழங்கை உப்பு சேர்த்து வேக வைத்து தோலுரித்து மசித்துக் கொள்ளவும்.

ப்ருக்கோலியை சிறு பூக்களாக பிரித்து உப்பு கலந்த நீரில் அலசி., பின் தண்ணீரில் உப்பு போட்டு வேக விடவும்.

ப்ருக்கோலியை பொடிதாக நறுக்கி, மசித்த கிழங்குடன் சேர்த்து மிளகுத்தூள்,கரம் மசாலா,கொ.ல்லி தழை சேர்த்து பிரட்டி வைக்கவும்.

சீஸை துருவி கொ.மல்லி தழை,½ எலுமிச்சை ஜூஸ் சேர்த்து பிசைந்துக் கொள்ளவும்.

சிறிது ப்ருக்கோலி கலவையை கையில் எடுத்து உருட்டி நடுவில் சிறிய குழி செய்து அதில் சிறிது சீஸ் கலவையை வைத்து மூடி ஓவல் வடிவத்தில் உருட்டி வைக்கவும்.

மைதாவை தண்ணீரில் கலந்துக் கொள்ளவும்.ரஸ்க் தூள் -முழு ஓட்ஸை 2:1 அளவில் கலந்து வைக்கவும்.

இந்த க்ராக்கெட்ஸை மைதா-தண்ணீர் கலவையில் முக்கி,ரஸ்க் தூளில் பிரட்டி எண்ணெயில் பொறித்தெடுக்கவும்…

குறிப்பு:-
=======

ப்ருக்கோலிக்கு பதில் காலிப்ளவர் சேர்த்தும் செய்யலாம்.

கிழங்கிலும் ப்ருக்கோலியிலும் உப்பு சேர்த்து வேக வைப்பதால் கலவையில் உப்பு சேர்க்க தேவையில்லை..,தேவைக்கு சேர்த்துக் கொள்ளவும் …

ஹலீமுன்னிஸா,
பெங்களூர்.

Average Member Rating

(0 / 5)

0 5 0
Rate this recipe

0 people rated this recipe

Related Recipes:
  • pudding

    Condensed Milk Caramel Pudding without oven

  • sandwich

    வெஜ் பிரெட் சாண்ட்விச்/veg bread sandwich

  • cuttlet1

    Chicken cutlet /சிக்கன் கட்லெட்

  • stuffed chappatti1

    Stuffed Chapatti / ஸ்டஃப்டு சப்பாத்தி

  • bananaleaf-fish-fry

    வாழை இலை மசாலா மீன்/ banana leaf fish fry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *