கத்திரிக்காய் தொக்கு/ brinjal thokku

2016-01-22
  • Prep Time : 0m
  • Cook Time : 0m
  • Ready In : 0m
கத்திரிக்காய் தொக்கு:
 
தே.பொருட்கள்:
 
கத்திரிக்காய் -250கிராம்
வெங்காயம் -4 பெரியது
தக்காளி 4பெரியது
பச்சை மிளகாய்-2
புளி – 1கையளவு
எண்ணெய் -150கிராம்
வெந்தயம்,சீரகம்,சோம்பு தலா 1 சிட்டிகை.
கடுகு, மிளகு,கறிவேப்பிலை தாளிப்புக்கு
உப்பு தேவைக்கு…
கொத்த மல்லி இலை தேவைக்கு..
 
brinjal curry
செய் முறை:
 
முதலில் கத்திரிகாய்களை நான்கு துண்டுக்களாக வெட்டி வைக்க வேண்டும்.
 
வெங்காயம்,பச்சை மிளகாய்,தக்காளி இவைகளை மிக்சியில் அரைத்து வைத்து கொள்ள வேண்டும்.
 
புளியை ஊற வச்சிகோங்க பிறகு சட்டியை அடுப்பில் ஏற்றி எண்ணெய் ஊற்றி கடுகு,மிளகு,கறிவேப்பிலை போட்டு தாளிக்க வேண்டும்.
 
தாளிப்பு வெடிக்க விடுங்க மணம் கொடுக்கும்.
 
பிறகு அரிந்து வைத்த கத்திரிக்காய்களை போட்டு நன்கு பொன்னிறமாகும் வரை வதக்கவும்,
 
பிறகு அரைத்து வைத்த தக்காளி விழுதை தட்டவும் நன்கு கொதித்து வந்ததும் புளி கரைசலை ஊத்தவும்
 
நன்கு வெந்ததும் வெந்தயம்,சீரகம்,சோம்பு இவைகளை கொஞ்சம் வறுத்து இடித்து போட்டு கொஞ்ச நேரம் கொதிக்க விட்டு கொத்த மல்லி இலை போட்டு இறக்கவும்….
 
சிறு விளக்கம்:
 
நமதூரிலும் வெளியூர்களிலும் திருமண விஷேசங்கள் மற்றும் இதர விஷேசங்களுக்கு பிரியாணிக்கு துணையாக கத்திரிக்காய் தொக்கு மிகுதமாக இருக்கும்.விஷேசங்களில் சோர்வாக போய் வர்ரவங்களுக்கு இதனுடைய புளிப்பு மகிழ்ச்சியை கொடுக்கும்……
 
 
குறிப்பு:
 
பிரியாணிக்கு மட்டு மில்லாது ப்ரைட் ரைஸ்,குஸ்கா,புலாவ்,நெய் சோறு,இன்னும் சப்பாத்திக்கும் துணையாக தொட்டுக்க சுவையாக இருக்கும்…
 
பிரயாணங்களுக்கு பயமில்லாம கொண்டு போகலாம் சீக்கிரமாக கெடாது…அப்றம்….கர்பிணிகளுக்கு கத்திரிகாய் ரொம்ப நல்லது அதோட புளிப்பும் இருக்கும் போது கேட்கவா வேண்டும்!(எனது அனுபவம்)
 
சமைக்கும் நேரம்:30நிமிடங்கள்
பரிமாறும் அளவு:8பேர்
 
மீரா சுல்தான்
Average Member Rating

(0 / 5)

0 5 0
Rate this recipe

0 people rated this recipe

Related Recipes:
  • pudding

    Condensed Milk Caramel Pudding without oven

  • soft poori

    Soft Poori / உப்பலான பூரி

  • chicken fried rice

    Chicken Fried rice / சிக்கன் ஃப்ரைடு ரைஸ் (Leftover)

  • chicken curry1

    Kayal Chicken gravy / முருங்கைகாய் கோழிகறி ஆணம்

  • sandwich

    வெஜ் பிரெட் சாண்ட்விச்/veg bread sandwich

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *