மிளகு சிக்கன் கபாப் / Black pepper chicken kebab

2016-01-20
  • Prep Time : 0m
  • Cook Time : 0m
  • Ready In : 0m
kabab
 
சமையல் பற்றிய சிறுவிளக்கம்-
 
கபாப் ( kebap, kabob, kebob, அல்லது kabab ) இது ஒரு வகையான இஸ்லாமிய பாரம்பரிய உணவு.
 
இது ஈரான், ஆப்கன், மத்திய கிழக்கு, மற்றும் தெற்காசிய உணவாகும். இது இறைச்சி, சிக்கன் துண்டுகள், மீன் அல்லது காய்கறிகளை குச்சியில் குத்தி வாட்டி செய்யும் உணவு.
 
PhotoGrid_1451829072436 

தேவையான பொருட்கள்:
 
சிக்கன் (bone less) – 300 கிராம் – சிறு துண்டுகள்
1 பச்சை குடை மிளகாய் (8 துண்டுகளாக நறுக்கவும்)
1 மஞ்சள் குடை மிளகாய் (8 துண்டுகளாக நறுக்கவும்)
2 பெரிய வெங்காயம் (4 துண்டுகளாக நறுக்கவும்)
4 பொத்தான் (button) காளான் (பாதியாக நறுக்கவும்)
1 பெரிய வெங்காயம்*
1 டேபிள் ஸ்பூன் மிளகு *
2 பே இலைகள் *
2 டேபிள் ஸ்பூன் ஆலிவ் எண்ணெய் *
1 டீ ஸ்பூன் ஆர்கனோ தூள் *
1 டீ ஸ்பூன் மிளகு தூள் *
உப்பு *
2 டேபிள் ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது *
2 டேபிள் ஸ்பூன் தேன் *

PhotoGrid_1451829102679 

 
செய்முறை
 
1) அனைத்து(*) பொருட்களை ஒன்றாக சேர்த்து மிக்ஸியில் அரைத்து, சிக்கன் துண்டுகள், நறுக்கிய மிளகாய்கள், நறுக்கிய வெங்காயம் மற்றும் காளானுடன் சேர்த்து ஒரு பாத்திரத்தில் 3 மணி நேரம் ஊர வைக்கவும்.

PhotoGrid_1451829123716  PhotoGrid_1451829145531  PhotoGrid_1451829163150  PhotoGrid_1451829201190

 
2) இதனை குச்சிகளில் வெங்காயம், சிக்கன் துண்டு, மிளகாய், சிக்கன் துண்டு, காளான், சிக்கன் துண்டு, மற்றும் மிளகாய் என வருசயாக குத்தி கொள்ளவும்.
3) இதனை வாட்டும் பேன், ஒவன் அல்லது வாட்டும் அடுப்பில் சிக்கன் வேகும் வரை வாட்டவும்.
 
குறிப்பு- காளான், மற்றும் குடை மிளகாய்க்கு பதிலாக விருப்பம் போல் காய்கறிகள் சேர்க்கலாம். சிக்கன்க்கு பதிலாக இறைச்சி, இறால், கனவாய், மீன் துண்டுகள் பயன் படுத்தலாம்.
 
 
சமைக்கும் நேரம்: 1 மணி நேரம்
 
பரிமாறும் அளவு: 8 சிக்கன் கெபாப்
 
ஆயிஷா அப்துல் ஜபார்
 
மலேஷியா

 

Average Member Rating

(0 / 5)

0 5 0
Rate this recipe

0 people rated this recipe

Related Recipes:
  • pudding

    Condensed Milk Caramel Pudding without oven

  • chicken fried rice

    Chicken Fried rice / சிக்கன் ஃப்ரைடு ரைஸ் (Leftover)

  • chicken curry1

    Kayal Chicken gravy / முருங்கைகாய் கோழிகறி ஆணம்

  • sandwich

    வெஜ் பிரெட் சாண்ட்விச்/veg bread sandwich

  • cuttlet1

    Chicken cutlet /சிக்கன் கட்லெட்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *