ரவா கேக்/ basbousa

2016-01-26
  • Prep Time : 0m
  • Cook Time : 0m
  • Ready In : 0m

ரவா கேக்/ basbousa

basbousa

சமையல் பற்றிய சிறுவிளக்கம் – இது துர்க்கி, அரபு நாடு, மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் ஒரு பாரம்பரிய இனிப்பு கேக் ஆகும். மத்திய கிழக்கு நாடுகளில் இந்த கேகின் மேல் ரோஜா சாரம் கலந்த இனிப்பு சிரப் ஊற்ற பப்டிருக்கும். மலேஷியாவிலும் ரவா கேக் செய்வார்கள் ஆனால் இனிப்பு சிரப் ஊற்றாமல் செய்வார்கள். ஒரு சில மத்திய கிழக்கு நாடுகளில் இதனை “ஹர்ரிஸா அல்லது ஹர்ரெஸா என்று அழைக்கின்றது.

PhotoGrid_1453125814709
PhotoGrid_1453125879081 

தேவையான பொருட்கள்:
1 1/2 கப் ரவை
1/2 மைதா
1/2 கப் உருக்கிய பட்டர் அல்லது நெய் அல்லது சோள எண்ணெய்
1 தேக்கரண்டி பேக்கிங் பவுடர்
1/4 தேக்கரண்டி சோடா பைகார்பனேட்
1 கப் பால்
1/2 கப் சர்க்கரை (அரைத்து)
15-20 பாதாம் அல்லது பிடித்த நட்ஸ் அல்லது திராட்சை

இனிப்பு சிரப் –
1 கப் சர்க்கரை
1 கப் தண்ணீர்
1 தேக்கரண்டி (விரும்பினால்) ரோஜா சாரம் (rose water)
1 டேபிள் ஸ்பூன் தேன்
1 தேக்கரண்டி எலுமிச்சை சாறு

PhotoGrid_1453125909614  PhotoGrid_1453126058725

 

செய்யும் முறை:

1. முதலில், ஒரு கடாயில் இனிப்பு சிரப் செய்ய தேவையான பொருட்களை ஒன்றாக சேர்த்து, சக்கரை கரையும் வரை காய்ச்சி ஆர வைக்கவும்.

2. ரவை, மைதா, அரைத்த சக்கரை, பேக்கிங் பவுடர், மற்றும் சோடா பைகார்பனேடை ஒன்றாக கலக்கவும்.

3. அதில் உருக்கிய பட்டர் சேர்த்து கலக்கவும்.

PhotoGrid_1453126113458  PhotoGrid_1453126180919  PhotoGrid_1453126216465

4. அதன் பின்னர், பால் ஊற்றி நன்றாக கலக்கவும்.

5. ஒவனை 180 Celcius,5 நிமிடம் சூடாக்கவும். 8 inci கேக் பானில் பட்டர்/எண்ணெய் தடவவும்.

6. தயாரான கேக் மாவை 8 inci கேக் பானில் அல்லது பிடித்தமான கேக் தட்டில் ஊற்றி, அதற்க்கு மேல் பாதாம் அல்லது திராட்சை வைத்து, 30 நிமிடம் அல்லது வேகும் வரை ஒவனில் பேக் பன்னவும்.

basbousa

7. தயாரான கேகின் மீது காய்ச்சி வைத்த இனிப்பு சிரப் ஊற்றி பரிமாறவும்.

சமைக்கும் நேரம்: 1 மணி நேரம்

பரிமாறும் அளவு: 16 கேக் துண்டுகள் கிடைக்கும்

ஆயிஷா அப்துல் ஜபார்

மலேஷியா

Average Member Rating

(5 / 5)

5 5 1
Rate this recipe

1 people rated this recipe

Related Recipes:
  • pudding

    Condensed Milk Caramel Pudding without oven

  • chicken curry1

    Kayal Chicken gravy / முருங்கைகாய் கோழிகறி ஆணம்

  • sandwich

    வெஜ் பிரெட் சாண்ட்விச்/veg bread sandwich

  • cuttlet1

    Chicken cutlet /சிக்கன் கட்லெட்

  • stuffed chappatti1

    Stuffed Chapatti / ஸ்டஃப்டு சப்பாத்தி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *