நேந்திரம்பழம் ரோல் / Banana Roll

2016-01-13
  • Prep Time : 0m
  • Cook Time : 0m
  • Ready In : 0m

நேந்திரம்பழம் ஆரோக்கியத்திற்கு  மிகவும்  நல்லது .குழந்தைகளுக்கு இதை அவித்து கொடுத்து வந்தால்
ஞாபகசக்தி அதிகரிக்கும்..மேலும் பல மருத்துவ குணமுடைய நேந்திரம்பழத்தில் ரோல் செய்வது எப்படி ??? இதோ ….

20150710_200424-1

தேவையான பொருட்கள் :

  நேந்திரம்பழம்  -2

  தேங்காய் பூ – ஒரு கப்
  முந்திரிபருப்பு – 25 கிராம்
  திராட்சைபழம் -25 கிராம்
  நெய் – சிறிதளவு
  சீனி – 1 தே. கரண்டி
  எண்ணை -பொறிக்க 

20150710_204844 20150710_205939செய்முறை

1.நேந்திரம்பழத்தை துண்டுகளாக  வெட்டி ஒரு ஜல்லடையில் போட்டு வேற  ஒரு பாத்திரத்தில் தண்ணிர் வைத்து மூடிபோட்டு  அவித்து எடுக்கவும்.

2.ஒரு பானில் (pan)நெய்  ஊற்றி அதில் முதலில் முந்திரி , திராட்சை போட்டு  வறுத்து பிறகு தேங்காய் பூ போடவும் பிறகு  சீனி போட்டு வறுக்கவும் பொன்னிறமான பிறகு  அடுப்பை அணைக்கவும் .

3.அவித்த நேந்திரம்பழம் நன்றாக ஆறியதும்  தோலை நீக்கவும் பிறகு நன்றாக ( மாஷ் செய்யவும்) அல்லது  கையை கொண்டு பிசையவும்…

bananaroll (2)

4.நன்றாக  பிசைந்த  நேந்திரம்பழத்தை சிறு உருளைகளாகவும் பிறகு  ஒரு துணியினை நனைத்து அதை டேபிள் மேலே விரித்து அதில் நேந்திரம்பழு உருளைகளை வைத்து கையில் கொஞ்சம் நெய் அல்லது எண்ணெய்  தடவிய பின்  தட்டவும் அதில் ஒரு தே .கரண்டி தேங்காய் பூ  அடக்கத்தை வைத்து சிலிண்டர் வடிவில் ரோல் செய்யவும் .

5.பிறகு எண்ணையில் பொறித்து  எடுக்கவும் .சுவையான நேந்திரம்பழம் ரோல் தயார்..

Average Member Rating

(0 / 5)

0 5 0
Rate this recipe

0 people rated this recipe

Related Recipes:
  • pudding

    Condensed Milk Caramel Pudding without oven

  • soft poori

    Soft Poori / உப்பலான பூரி

  • sandwich

    வெஜ் பிரெட் சாண்ட்விச்/veg bread sandwich

  • cuttlet1

    Chicken cutlet /சிக்கன் கட்லெட்

  • stuffed chappatti1

    Stuffed Chapatti / ஸ்டஃப்டு சப்பாத்தி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *