நெத்திலி மீன் ஃப்ரை / Anchovy fish Fry

2014-02-23
  • Yield : 30
  • Servings : 4-5
  • Prep Time : 30m
  • Cook Time : 10m
  • Ready In : 40m

 

Ingredients

  • நெத்திலி மீன் - 25 - 30 மீன்கள்
  • இஞ்சி,பூண்டு விழுது - 1 டீ ஸ்பூன்
  • மிளகாய்த்தூள் - 3 டீ ஸ்பூன்
  • தனியாத்தூள் - 1 டீ ஸ்பூன்
  • மஞ்சள்தூள் -1 /2 டீ ஸ்பூன்
  • எலுமிச்சம்பழம் - 1/2
  • எண்ணெய் - சிறுது
  • உப்பு - தேவையான அளவு
 

 

Method

Step 1

நெத்திலி மீன் தலை மற்றும் உள் பகுதியினை நன்றாக தண்ணீர் ஊற்றி மஞ்சள் சேர்த்து கழுவி தனியாக வைக்கவும்.

Step 2

சுத்தம் செய்த மீனிலில் மேலே சொன்ன தூள் வகைகள், இஞ்சி பூண்டு விழுது, மற்றும் உப்பு சேர்த்து விரவி அரை மணி நேரம் ஊற வைக்கவும்.

Step 3

தோசை கல் அல்லது நாண் - ஸ்டிக் கடாயில் தேவைக்கு எண்ணெய் ஊற்றி மீனை பொறிக்கவும். ஒரு பக்கம் பொறிந்த பின்பு மறு பக்கம் திருப்பி போட்டு பொறிக்கவும்.

Step 4

நன்றாக பொறிந்த பின்பு அதனை எடுத்து சூடாக பரிமாறவும்.

பின்குறிப்பு:

மீன்னுடன் தூள் வகைகளை பிரட்டும் பொழுதும், மீன் பொறித்தி திருப்பி போடும் பொழுதும் மீன் உடையாமல் மெதுவாக பக்குவமாக செய்யவும்.

மீன் பிரட்டி வைக்கும் பொழுது கலர் தேவை என்றால் சிறுது பூட் கலர் சேர்த்துக்கொள்ளலாம்.

இந்த நெத்திலி மீன் ஃப்ரை சாம்பார் சாதம், ரசம், தயிர் சாதத்துடன் சாப்பிட சுவையாக இருக்கும்.

மீன் உணவின் சத்துக்கள்மீன் உணவு வகைகளில் புரதச் சத்துக்கள் அதிகமாக காணப்படுகின்றன. சுமார் 20 சதவிகித புரதச் சத்துகள் அடங்கியுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. கொழுப்பு சத்துக்கள் ஆடு மற்றும் கால்நடை இறைச்சியை காட்டிலும் குறைவாகவே காணப்படுகிறது. மேலும் மீன் உணவுகளில் சுண்ணாம்பு சத்துகள் அதிகம் நிறைந்துள்ளது. மேலும் மீன் உணவு வகைகளில் கரையும் வைட்டமின்களான வைட்டமின் சி , நியாசின் மற்றும் வைட்டமின் டி ஆகியவை உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது——————————-
ஃபாயிஷாகாதர்

 

Average Member Rating

(4.3 / 5)

4.3 5 4
Rate this recipe

4 people rated this recipe

Related Recipes:
  • chicken fried rice

    Chicken Fried rice / சிக்கன் ஃப்ரைடு ரைஸ் (Leftover)

  • chicken curry1

    Kayal Chicken gravy / முருங்கைகாய் கோழிகறி ஆணம்

  • sandwich

    வெஜ் பிரெட் சாண்ட்விச்/veg bread sandwich

  • cuttlet1

    Chicken cutlet /சிக்கன் கட்லெட்

  • stuffed chappatti1

    Stuffed Chapatti / ஸ்டஃப்டு சப்பாத்தி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *