அடை முட்டை / adai muttai

2016-02-06
  • Prep Time : 0m
  • Cook Time : 0m
  • Ready In : 0m
==============
 
முட்டை என்றாலே ஆம்லட், Half boil,அவித்த முட்டை மட்டும்தானா என்ற சலிப்பு காயல் நகர மக்களுக்கு வரவே வராது.ஏனெனில் காயலில் அனேக வீடுகளில் அடை முட்டை வெகு பிரபலம்.சாதம்,வெங்காயம்,தேங்காய் எல்லாம் சேர்த்துப் போட்டு அடை மாதிரி தடிமனாக சுடுவர்.எனவே இதை அடை முட்டைஎன்பார்கள்.எல்லா சாமான்களும் சேர்த்து சுடுவதால் சிலர் ‘சாமான் போட்டட முட்டை’ என்றும் கூறுவார்கள்.சாம்பார், காய்கறி கூட்டுகளுடன் சேர்த்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.
 
தேவையான பொருட்கள் :-
 
முட்டை- 3
சோறு – சிறு குழந்தைக்குரிய அளவு
வெங்காயம் -1 பெரியது
தக்காளி -½
துருவிய தேங்காய் -2 tbs
ப.மிளகாய் – 1 சிறியது
கருவேப்பிலை,கொ.மல்லி இலை – கொஞ்சம்
பொட்டு கடலைத் தூள் – 2 tbs
சீரகத் தூள் – 1 tsp
காயல் கீரைப் பொடி – காரத்திற்கேற்ப
மசாலாத் தூள் -1 tsp(optional )
மிளகுத் தூள் – ½ tsp
மாசித் தூள் – 2. Tsp
உப்பு – தேவைக்கு
நெய் (அ) எண்ணெய் – பொறிப்பதற்கு
 
egg
செய்முறை :-
 
வேக வைத்த சோறில் அடி சோற்றை எடுத்து நன்கு மசிக்கவும்.அல்லது மிக்ஸியில் ஒரு சுற்றி எடுக்கவும்.
வெங்காயம்,தக்காளி,ப.மிளகாயை மிகவும் பொடியாக நறுக்கவும்.
முட்டை தவிர அனைத்து பொருட்களையும் சேர்த்து லேசாக தண்ணீர் தெளித்து நன்கு பிரட்வும்.பின்னர் அதனுடன் முட்டைகளை சேர்த்து நன்கு கலக்கவும்.
சிறிய பொறிக்கஞ்சட்டி அல்லது தோசைக்கல்லில் எண்ணெய் (அ) நெய் ஊற்றி முட்டைக்கலவையில் சிறிது எடுத்து ஊற்றி வேக வைத்து திருப்பி போட்டு வேக வைத்து எடுக்கவும்.பொறித்த முட்டையை ஒரு தட்டில் சோறு பரப்பி அதன்மேல் வைத்து பரிமாறவும்.
 
குறிப்பு:-
 
பொறித்த அடை முட்டையை சோற்றின் மேல் வைத்துதான் காயலில் பரிமாறுவார்கள்.முட்டையில் உள்ள எண்ணெய் சோற்றில் இறங்கி நல்ல மணமாக இருக்கும்.அந்த சோறை யார் சாப்பிடுவதென்பது தனிப் போட்டி.
 
முன் தயாரிப்பு :- 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம் :- 5 நிமிடங்கள் (1 முட்டைக்கு)
பரிமாறும் அளவு :- 3-4 முட்டைகள்
 
ஹலீமுன்னிஸா.,
பெங்களூர்.
Average Member Rating

(4.5 / 5)

4.5 5 2
Rate this recipe

2 people rated this recipe

Related Recipes:
  • pudding

    Condensed Milk Caramel Pudding without oven

  • soft poori

    Soft Poori / உப்பலான பூரி

  • chicken fried rice

    Chicken Fried rice / சிக்கன் ஃப்ரைடு ரைஸ் (Leftover)

  • chicken curry1

    Kayal Chicken gravy / முருங்கைகாய் கோழிகறி ஆணம்

  • sandwich

    வெஜ் பிரெட் சாண்ட்விச்/veg bread sandwich

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *