Achari mutton curry / ஸ்பைசி மட்டன் கறி

2015-10-10
  • Prep Time : 0m
  • Cook Time : 0m
  • Ready In : 0m

தேவையான பொருட்கள்:

இறைச்சி – ஒரு கிலோ
இஞ்சி பூண்டு விழுது – 2 மே கரண்டி
மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன்
தனி மிளகாய்த்தூள் – ஒரு மே கரண்டி
வெங்காயம் – 3 பெரியது
தக்காளி – 3 பெரியது
பச்சை மிளகாய் – 2
வறுத்து அரைக்க :
காய்ந்த வத்தல் – 10
கடுகு – அரை டீஸ்பூன்
வெந்தையம் -கால் டீஸ்பூன்
சீரகம் – ஒரு டீஸ்பூன்
சோம்பு – ஒரு டீஸ்பூன்
கிராம்பு – 3
பட்டை – 1
உப்பு – தேவைக்கு
எண்ணெய் – 100 மில்லி

mutton curry

செய்முறை :

முதலில் வறுத்து அரைக்க கொடுத்த பொருட்களை கடாயில் எண்ணெய் விடாமல் வறுத்து மிக்சியில் தூள் செய்து வைக்கவும்.
பிறகு அடிகனமான பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்த பின்பு நீட்டமாக நறுக்கிய வெங்காயம் போட்டு வதக்கவும்.. கலர் மாறும் வரை வதக்கவும். பிறகு இதனுடன் இஞ்சி பூண்டு விழுது நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கவும். (குறைந்த தணலில் அடுப்பினை வைக்கவும்)
பிறகு அரைத்த தூள் சேர்த்து பிரட்டிவிடவும் இதனுடன் சுத்தம் செய்த கறியினை போட்டு வதக்கவும். நன்றாக எண்ணெயில் பிரட்டிவிடவும். மூடி போட்டு வேக வைக்கவும் இரண்டு நிமிடங்களுக்கு ஒரு முறை அடி பிடிக்காமல் இருக்க பிரட்டி விடவும். மட்டன் கலர் மாறி வரும் பொழுது நறுக்கிய தக்காளி ,மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் , உப்பு சேர்த்து நன்றாக பிரட்டி விடவும். ஒரு கப் தண்ணீர் ஊற்றி குறைந்த தணலில் வேக வைக்கவும். நன்றாக எண்ணெய் விட்டு பார்க்கவே நல்ல கலராக இருக்கும். மேலே கொத்தமல்லி தூவி இறக்கவும்.

குறிப்பு:
நான் இதில் உருளைக்கிழங்கு சேர்த்து இருக்கேன்.. விரும்பியவர்கள் கறியுடன் உருளைக்கிழங்கு சேர்த்தும் செய்யலாம்..

Average Member Rating

(5 / 5)

5 5 1
Rate this recipe

1 people rated this recipe

Related Recipes:
  • chicken fried rice

    Chicken Fried rice / சிக்கன் ஃப்ரைடு ரைஸ் (Leftover)

  • chicken curry1

    Kayal Chicken gravy / முருங்கைகாய் கோழிகறி ஆணம்

  • sandwich

    வெஜ் பிரெட் சாண்ட்விச்/veg bread sandwich

  • cuttlet1

    Chicken cutlet /சிக்கன் கட்லெட்

  • stuffed chappatti1

    Stuffed Chapatti / ஸ்டஃப்டு சப்பாத்தி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *