ஆப்பம் & கடலைக்கறி/ Aappam kadalai curry

2016-11-01
  • Prep Time : 0m
  • Cook Time : 0m
  • Ready In : 0m

ஆப்பம் & கடலைக்கறி

#Kayal_Samayal# #Aappam_Kadalai_Curry#

#ஆப்பம்_செய்ய_தேவையான_பொருட்கள்:

More recipes please visit www.kayalsamayal.com

பச்சரிசி – 200 கிராம் (ரைஸ் குக்கர் கப்பில் 1 1/2 கப்)

தேங்காய் – பாதி

தேங்காய் தண்ணீர் – 1 தேங்காய் அளவு(optional)

தண்ணீர் ஊற்றி வைத்த பழைய சோறு – கொஞ்சம்

சிறிதளவு பழைய சோறு தண்ணீர் – அரைக்க

சோடா உப்பு – 1 சிட்டிகை

#செய்முறை:

More recipes please visit www.kayalsamayal.com

1. பச்சரிசியை 5 மணி நேரங்கள் ஊர வைத்து, இதனுடன் துருவிய தேங்காய், பழைய சோறு, தேங்காய் தண்ணீர் மற்றும் பழைய சோறு தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்து, 15 முதல் 18 மணி நேரங்கள் புளிக்க வைத்து, சுடும் பொழுது சோடா உப்பு ஒரு சிட்டிகை சேர்த்து கலக்கி சுட்டெடுத்தால்..

சுவையான மொரு மொருப்பான ஆப்பம் தயார்

#டிப்ஸ்:

1. தேங்காய் தண்ணீருக்கு பதில் சுடும் பொழுது 1tsp சுகர் சேர்த்துக் கொள்ளலாம்.

#கடலைக்கறி:

#கடலைக்கறி_செய்ய_தேவையான_பொருட்கள்:

More recipes please visit www.kayalsamayal.com

எண்ணெய் – தேவைக்கு

கருப்பு கொண்டைக் கடலை – 100 கிராம்

வெங்காயம் – 1 (பெரியது)

தக்காளி – 1

பூண்டு – 5 பல்

பட்டை – கொஞ்சம்

சோம்பு – 1/2 tsp

மிளகு – 1/2 tsp

மல்லி – 1 tblsp

துருவிய தேங்காய் – 1 tblsp

தேங்காய் பால் – தேவைக்கு

வத்தல் தூள்/மஞ்சள் தூள் – தேவைக்கு

பச்சை மிளகாய் – 2

கறிவேப்பிலை – சிறிதளவு

 

appam-kadalai-curry

#செய்முறை:

More recipes please visit www.kayalsamayal.com

1. கருப்பு கொண்டைக் கடலையை தண்ணீர் ஊற்றி 8 மணி நேரம் ஊர வைத்து, அந்த தண்ணீரைக் கொண்டே குக்கரில் 4 விசில் போட்டு வேக வைத்து எடுத்து வைக்கவும்.

2. வெறும் சட்டியில் சோம்பு, மிளகு, மல்லி சேர்த்து வறுத்து எடுத்து வைக்கவும்.

3. அதே சட்டியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி பூண்டு, பட்டை, துருவின தேங்காய் சேர்த்து நன்கு வருத்து, மேலே வருத்து வைத்ததோடு சேர்த்து நன்கு பேஸ்ட் போல் அரைத்து வைக்கவும்.

4. தக்காளியை சிறிதளவு எண்ணெய் ஊற்றி வதக்கி, ஆர வைத்து அரைத்து எடுத்து வைக்கவும்.

5. பேனில் தேங்காய் எண்ணெய் ஊற்றி, வெங்காயம், கறிவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி, அரைத்து வைத்த தக்காளி பேஸ்ட் மற்றும் வறுத்து அரைத்த பேஸ்ட்டை சேர்த்து தேவைக்கு வத்தல் தூள் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து, சிறிதளவு கொதி வந்ததும் வேக வைத்த கடலை மற்றும் அதன் தண்ணீர் சேர்த்து கொதி வந்ததும், கடைசியில் தேங்காய் பால் தேவைக்கு ஊற்றி, சிம்மில் 1 நிமிடம் வைத்து அடுப்பை அணைக்கவும்.

கலக்கலான சுவையில் கடலைக் கறி தயார்

சுட சுட ஆப்பத்துடன் சாப்பிட அசத்தலாக இருக்கும்.

இந்த சூப்பரான ரெசிபியை நமக்காக செய்து அனுப்பியவர்..

HalimaKadSul – துபாய்

Average Member Rating

(5 / 5)

5 5 1
Rate this recipe

1 people rated this recipe

Related Recipes:
  • chicken fried rice

    Chicken Fried rice / சிக்கன் ஃப்ரைடு ரைஸ் (Leftover)

  • chicken curry1

    Kayal Chicken gravy / முருங்கைகாய் கோழிகறி ஆணம்

  • sandwich

    வெஜ் பிரெட் சாண்ட்விச்/veg bread sandwich

  • cuttlet1

    Chicken cutlet /சிக்கன் கட்லெட்

  • stuffed chappatti1

    Stuffed Chapatti / ஸ்டஃப்டு சப்பாத்தி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *