ஹார்ட் ஷேப் எக் ஆம்லெட் / Heart shaped egg

By : | Comments Off on ஹார்ட் ஷேப் எக் ஆம்லெட் / Heart shaped egg | On : February 1, 2015 | Category : Garnishing Ideas

DSC00633

DSC00619

தேவையான பொருட்கள்:
முட்டை – 3
கேரட் -1/2
வெங்காயம் – 1/2
மிளகுத்தூள் – 3ஸ்பூன்
உப்பு – தேவைக்கு
எண்னெய் – 2ஸ்பூன்

DSC00620

வெங்காயம், கேரட்டையும் பொடியாக நறுக்கி வைக்கவும்

DSC00621
மூன்று முட்டையும் ஒன்றாக கலக்கி அதில் 4 ஸ்பூன் முட்டை கலவையினை தனியாக எடுத்து வைக்கவும்

DSC00622
3 முட்டை கலவையில் நறுக்கிய கேரட், வெங்காயம், மிளகுத்தூள், உப்பு போட்டு நன்றாக அடித்து கலக்கி வைக்கவும்.

DSC00623
தோசைக்கல்லில் சிறுது எண்ணெய் தடவி காய்ந்த பின்பு சிறுது முட்டை கலவையினை ஊற்றவும். பிரட்டி போட வேண்டாம்

DSC00624
அப்படியே கரண்டியால் சுற்றி தோசைக்கல்லின் ஓரத்தில் முதல் முட்டையினை வைக்கவும். அதன் அருகிலே மீதியிருப்பதில் பாதி முட்டை கலவையினை ஊற்றவும். இதுபோல் மூன்றாவது கலவையில் மீதியிருக்கும் முட்டையினை முழுவதும் ஊற்றி விடவும்

DSC00625
இதனையும் சுற்றி ஒரு தட்டில் வைக்கவும்DSC00627
ஆம்லெட் ஆறிய பிறகு கத்தி வைத்து படத்தில் இருப்பது போல் கட் செய்யவும்.

DSC00628
கட் செய்த ஒரு பகுதியினை திருப்பி அதனை கிராஸ்ஸாக மீண்டும் கட் செய்யவும்

DSC00630
இடம் பக்கம் முட்டை அப்படியே இருக்கட்டும், வலது பக்க முட்டையினை அப்படியே திருப்பி வைத்தால் ஹார்ட் வடிவம் கிடைக்கும்

DSC00631
இதனை அப்படியே முன்பு எடுத்து வைத்த முட்டை கலவையில் இரண்டு புறமும் முக்கி எடுக்கவும்

DSC00632
தோசைக்கல்லில் சிறுது எண்ணெய் தேய்த்து ஹார்டு முட்டையினை வைக்கவும்

DSC00633
இரண்டு புறமும் போட்டு எடுக்கவும். ஹார்ட் ஓட்டி விடும்

DSC00634
சுவையான விதியாசமான ஹார்ட் ஷேப் எக் ஆம்லெட் ரெடி. விருந்து வைக்கும் பொழுது இப்படி விதியாசமாக செய்து வைக்கலாம். அழகாக இருக்கும், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவாங்க

Share This Post!